என்.எஸ்.எஸ்., சார்பில் ஆதரவற்றோருக்கு உதவி
தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் அரையாண்டு விடுமுறையில் என்.எஸ்.எஸ்., முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த முகாம்கள் 21 பள்ளிகள் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு 20 கிராமங்களில் முகாம் நடத்தப்பட்டது.
இம் முகாமில் மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் உள்ளிட்ட பல தலைப்புகளில் கருத்தரங்குகள், மலைப்பகுதிகளில் சுத்தம் செய்தல், கோயில் களில் உழவாரப்பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன.
என்.எஸ்.எஸ்., சார்பில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் வளாகப்பகுதியில் நடந்த முகாமில் ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக போர்வை வழங்கப்பட்டது.
முகாமில் மாவட்ட என்.எஸ்.எஸ்.,திட்ட ஒருங்கிணைப்பாளர் நேருராஜன் முகாம்களை ஒருங்கிணைத்தார். நிறைவு விழாவில் சி.இ.ஓ., இந்திராணி, டி.இ.ஓ.,க்கள் வசந்தா, சண்முகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.