2025ல் புதிய வெற்றி வாய்ப்பு கிடைக்கட்டும்; வாழ்த்தினார் பிரதமர் மோடி!

10


புதுடில்லி: இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், செழிப்பை வழங்கட்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


2024ம் வருடம் முடிந்து 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்தது. ஆங்கில புத்தாண்டு பிறந்ததை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இது குறித்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் இனிய ஆங்கில் புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், செழிப்பை வழங்கட்டும். உலகெங்கும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க இணைந்து பயணிக்க உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: இனிய 2025! இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வெற்றி வாய்ப்புகளை வழங்கட்டும். அனைவருக்கும் முடிவில்லாத மகிழ்ச்சியை இந்த புத்தாண்டு வழங்கட்டும். நல்ல ஆரோக்கியம், செழிப்பு ஆகியவை அனைவரது வாழ்விலும் கிடைக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement