டிசம்பரில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.77 லட்சம் கோடி
புதுடில்லி:கடந்த டிசம்பர் மாதம் 1.77 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வசூலாகி இருப்பதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. தொடர்ச்சியாக, பத்தாவது மாதமாக ஜி.எஸ்.டி.,வசூல்
1.70 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது.
இதில், சி.ஜி.எஸ்.டி.,யின் பங்களிப்பு 32,836 கோடி ரூபாய்; எஸ்.ஜி.எஸ்.டி.,யின் பங்களிப்பு 40,499 கோடி ரூபாய்; ஐ.ஜி.எஸ்.டி.,யின் பங்களிப்பு 47,783 கோடி ரூபாய்; செஸ் பங்களிப்பு 11,471 கோடி ரூபாய் அடங்கும்.கடந்த 2023 டிசம்பரில் 1.65 லட்சம் கோடி ரூபாய் வசூலான நிலையில், 2024, டிசம்பரில் வசூல், 7.30 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.
இருப்பினும், கடந்த நவம்பரில் வசூல் 1.82 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதனோடு ஒப்பிடுகையில், டிசம்பரில் சற்று குறைந்துஉள்ளது. அதிகபட்சமாக, கடந்தாண்டு ஏப்ரலில் 2.10 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.