புகார் பெட்டி தொட்டியை அகற்றியதால் குடிநீர் இல்லாமல் தவிப்பு

தொட்டியை அகற்றியதால் குடிநீர் இல்லாமல் தவிப்பு



அடையாறு மண்டலம், 175வது வார்டு, வேளச்சேரி, சாஸ்திரி நகரில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 20 ஆண்டுகளாக சாலையோர தொட்டியில் நிரப்பும் குடிநீரை பயன்படுத்துகின்றனர். பத்து ஆண்டுக்குமுன், 13231 எண் கொண்ட, குடிநீர் தொட்டியை வாரியம் வைத்தது. சிலர் இடையூறாக கருதி, கவுன்சிலரிடம் கூறி தொட்டியை அகற்றினர்.

இதனால், குடிநீர் பிடிக்க முடியாமல் சிரமப்படுகிறோம். அடுத்த தெரு சென்றால், அங்குள்ளவர்கள் விரட்டியடிக்கின்றனர். குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கூறினால், நடவடிக்கையும் இல்லை. முறையான பதிலும் இல்லை.

ஏற்கனவே இருந்த இடத்தில் குடிநீர் தொட்டியை வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பகுதிமக்கள், வேளச்சேரி.

Advertisement