ரூ.2,000 கோடி மோசடி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம்

சென்னை, ரஷ்ய அரசிடம், 2,000 கோடி ரூபாய் முதலீடு பெற்று தருவதாக கூறி தொழிலதிபரிடம், எட்டு கோடி ரூபாய் வாங்கி மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அருண்ராஜ் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.

சென்னை ஈஞ்சம்பாக்கம், ஆலிவ் கடற்கரை பகுதியை சேர்ந்தவர் அருண்ராஜ், 38. இவரும், இவரது கூட்டாளிகள் எட்டு பேரும் சேர்ந்து, சென்னையை சேர்ந்த தொழில் அதிபரிடம், ரஷ்ய அரசிடம் 2,000 கோடி ரூபாய் முதலீடு பெற்று தருவதாகக் கூறி, எட்டு கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்தனர்.

இவர்களை, சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 476 சவரன் நகைகள், 400 கிலோ வெள்ளி பொருட்கள், 11 சொகுசு கார்கள் மற்றும் 14.50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று குண்டர் சட்டத்தில் அருண்ராஜ் கைது செய்யப்பட்டார்.

Advertisement