குளிர்ந்த சீதோஷ்ண நிலை உலர்களங்களில் பாதிப்பு

உடுமலை, ; குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக, கொப்பரை உலர்களங்களில் உற்பத்தி பாதித்துள்ளது.

உடுமலை சுற்றுப்பகுதியில், பகலில், குளிர்ந்த காற்று வீசி, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது; இரவில் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. தற்போது, உடுமலை சுற்றுப்பகுதிகளில், வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கி, இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல், இரவிலும், அதிகாலையிலும் அதிக பனிப்பொழிவு நிலவியது.

நேற்று முன்தினம் காலை முதல், சாரல் மழை அனைத்து பகுதிகளிலும் பெய்தது. மேலும், குளிர்ந்த காற்று வீசியதால், 'குளுகுளு'வென்ற சீதோஷ்ண நிலை நிலவியது.

பகல் முழுவதும், மேகமூட்டமாக இருந்தது. குளிர்ந்த சீதோஷ்ணம் காரணமாக, கொப்பரை உலர்களங்களில், உற்பத்தி பாதித்துள்ளது.

Advertisement