விபத்தில் சமையல்காரர் உயிரிழப்பு
சென்னை, மதுபோதையில் இருசக்கர வாகனத்தை இயக்கியபோது, நிலைதடுமாறி கீழே விழுந்த சமையல்காரர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மூலக்கடை, ஜி.என்.டி., சாலையைச் சேர்ந்தவர், தீபக் க்ரக், 30. எழும்பூரில் உள்ள தனியார் உணவகத்தில் சமையல்காரராக பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், இருசக்கர வாகனத்தில் சேத்துப்பட்டு கெங்குரெட்டி சுரங்கபாலத்தில் சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்தவரை, அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி காலை, 6:00 மணியளவில் உயிரிழந்தார். அண்ணாசதுக்கம் போலீசார் வழக்கு பதிந்து, விபத்து குறித்து விசாரித்தனர். மதுபோதையில் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை இயக்கியபோது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தது தெரியவந்தது.
அவருடன் இருசக்கர வாகனத்தின் சென்ற முட்டுக்காடைச் சேர்ந்த பாபு, 19 என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.