மருத்துவமனை அருகே கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

வளசரவாக்கம் மண்டலம், சின்ன போரூர் மருத்துவமனை சாலையில், நகர்ப்புற சமுதாய மருத்துவமனை உள்ளது. மகப்பேறு, தீவிர சிகிச்சை உட்பட, பல வார்டுகள் உள்ளன.

இங்கு, பிரசவம் மற்றும் பரிசோதனைக்காக தினமும், 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணியர், 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

இச்சாலையில் உள்ள நகர்புற சமுதாய மருத்துவமனை எதிரே, பாதாள சாக்கடை மேல் மூடியில் இருந்து கழிவுநீர் கசிந்து சாலையில் தேங்கி வருகிறது. இதனால், மருத்துவமனை வரும் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீரை அகற்ற வேண்டும்.

- ரஞ்சனி, வளசரவாக்கம்

Advertisement