கம்பியால் தாக்கிய விடுதி ஊழியர் கைது
திருமங்கலம், விடுதியில் தங்கி படிக்கும் வாலிபர் மற்றும் அவரது நண்பரை, இரும்புக் கம்பியால் தாக்கிய, விடுதி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வசிப்பவர் மாரீஸ், 21. இவர், அரசு தேர்வுக்காக படிக்கிறார். இவருக்கும், விடுதியில் வேலை செய்யும், சித்தார்த், 35 என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம், மாரீஸ் தன் நண்பரான கார்த்திக் என்பவருடன், 18வது பிரதான சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சித்தார்த், இருவரிடமும் தகராறு செய்து, அங்கிருந்த இரும்புக் கம்பியால், இருவரையும் தாக்கி விட்டு தப்பினார். காயமடைந்தோரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
புகாரின்படி, திருமங்கலம் போலீசார், சித்தார்த்தை கைது செய்து, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, சிறையில் அடைத்தனர்.