காப்பர் திருடிய ஊழியர் கைது

ஆவடி,பட்டாபிராம், நெமிலிச்சேரி, ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் யுவராஜ், 35. இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆவடி இன்ஜின் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து, தொழிற்சாலையில் இருந்து 10,000 ரூபாய் மதிப்புள்ள காப்பர் காயிலை திருடி, பையில் வைத்து மறைத்து வெளியே வந்தார்.

பிரதான வாயிலில் இருந்த காவலர்கள், அவரை பிடித்தனர். பட்டாபிராம் போலீசார், யுவராஜை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

Advertisement