பெண் கூட்டு பலாத்காரம் 4 பேர் சிறையில் அடைப்பு
ராமநாதபுரம்:-பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 4 பேர் ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். ராமநாதபுரத்தை சேர்ந்த 40 வயது பெண் புத்தேந்தல் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு டிச.29 இரவு ஆட்டோவில் சென்று திரும்பினார். அங்கு ரயில்வே கேட் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
அப்போது அங்கு மது அருந்திக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த புவனேஷ்குமார் 24, முருகன் 25, செல்வக்குமார் 24, முனீஸ் 23, ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் அப்பெண் புகார் செய்தார்.
எஸ்.பி., சந்தீஷ், ஏ.எஸ்.பி., சிவராமன் ஆகியோர் இது குறித்து விசாரித்த நிலையில் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
பரமக்குடி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை ஜன.10 வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் பாண்டிமகாராஜா உத்தரவிட்டார்.
இதன்படி ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.--------