மாரியம்மன் கோவிலில் பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
கோத்தகிரி, ; கோத்தகிரி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, 42ம் நாள் மண்டல பூஜை சிறப்பாக நடந்தது.
கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், நவ., 20ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததை அடுத்து, மண்டல பூஜை நடந்து வருகிறது.
கோத்தகிரி பகுதியில் வசிக்கும் பல்வேறு சமுதாயத்தினர் மற்றும் தனியார் சார்பில், அம்மனுக்கு அபிஷேக மலர் அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது. ஆன்மிக சொற்பொழிவு பஜனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
அதன்படி, 42வது நாள் மண்டல பூஜை நடந்தது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை முதல், அம்மனுக்கு சிறப்பு அலங்கார மலர் வழிபாடு சிறப்பு பூஜை நடந்தது.
கோத்தகிரி நகரம் உட்பட, கிராமப்புறங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.