கடனாக பணம் கேட்டு தாக்குதல்; பெண் கைது
பாப்பிரெட்டிப்பட்டி, ஜன. 2---
கடத்துாரை சேர்ந்தவர் சாந்தி,50. இவர் அப் பகுதியில் பாத்திர கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு புது ரெட்டியூரைச் சேர்ந்த சரவணன் மனைவி ரேணுகாதேவி,45 . பாத்திரம் வாங்கிய வகையில் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தில் ரேணுகாதேவி, சாந்தியிடம், 40,000 ரூபாய் கடனாக கேட்டார்.
என்னிடம் பணம் இல்லை என்று சாந்தி கூறியிருந்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் கடன் கேட்டு தொந்தரவு செய்தார். கடன் கொடுக்க மறுக்கவே, தடியால் சாந்தியை சராமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த சாந்தி, கடத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். புகாரின்படி கடத்துார் போலீசார் ரேணுகாதேவியை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement