செம்பு கம்பிகள் திருடியவர் கைது


ஓசூர், ஜன. 2-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி டைட்டான் டவுன்சிப் பகுதியை சேர்ந்தவர் சுனித் தக், 42. கெலமங்கலத்தில் உள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு, கிரானைட் நிறுவனத்திற்குள் புகுந்த, கெலமங்கலம் ஜிபியை சேர்ந்த முனிராஜ், 35, என்பவர், 7 கிலோ செம்பு கம்பிகளை திருடினார். இதை பார்த்த சுனித் தக், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முனிராஜை பிடித்து, கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிந்து முனிராஜை கைது செய்ததுடன், 7 கிலோ செம்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement