ஆங்கில புத்தாண்டில் ஜொலித்த சுவாமிகள் திரளான பக்தர்கள் வழிபாடு
சேலம், ஜன. 2-
ஆங்கில புத்தாண்டையொட்டி, சேலம் ராஜகணபதி கோவிலில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு ேஹாமம் நடந்தது. தொடர்ந்து பால் இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவி
யங்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்க கவசம் சாத்தி, வண்ண வாசனை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனை நடந்தது. பின் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
அதேபோல் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் பெருமாள், லஷ்மி தாயாருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு, வாசனை திரவிங்களால் அபிேஷகம் செய்து தங்க கவசம் சாத்தப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
சேலம் சுகவனேஸ்வரர், பட்டைக்கோவில் வரதராஜர், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர், நாமமலை பெருமாள், அம்மாபேட்டை சுப்ரமணியர், குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரி, பேர்லண்ட்ஸ் முருகன், காவடி பழநியாண்டவர், குரங்குச்சாவடி ஐயப்பன், சேலம் தர்ம சாஸ்தா என, மாநகரில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை, ஆராதனைகள் நடந்தன.
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் மூலவர், பெரியநாயகி தாயாருக்கு அபிேஷகம் செய்து, அம்மனுக்கு சந்தனகாப்பு சார்த்தி சர்வ அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல் கரபுரநாதருக்கு வெள்ளி 'நாகாபரணம்' சார்த்தி புது வஸ்திரம் தரித்து சர்வ அலங்காரத்தில் மகா தீபாராதனை காட்டப்பட்டது. அரியானுார், 1,008 சிவாலயம், மகா சக்தி மாரியம்மன் கோவில், வீரபாண்டி அங்காளம்மன் கோவில்களில் பக்தர்கள் வழிபட்டனர். காளிப்பட்டி கந்தசாமி கோவில் ராஜகோபுரம் முன், மலர்களால், '2025' என்ற எழுத்து வடிவிலும், கோவில் முழுதும் வண்ண மலர் தோரணங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டது.
இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தர்கோவிலில் அதிகாலை முதல் அபிஷேக ஆராதனை நடந்தது. ஓமலுார் செவ்வாய் சந்தை காசி விஸ்வநாதர், காருவள்ளி வெங்கட்ரமணர், நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர் கோவில்களில் சிறப்பு அபி ேஷகம், பூஜைகள் நடந்தன. தாரமங்கலம் கைலாசநாதர், கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் வாசனை திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
ஆத்துார் வெள்ளை விநாயகர் கோவிலில் தங்க கவசத்தில் விநாயகர் அருள்பாலித்தார். வடசென்னிமலை பாலசுப்ரமணியர், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆத்துார் திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள, அம்மன், நவநீத கிருஷ்ணன், வெங்கடாஜலபதி சுவாமிகள் தங்கம், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். ஏத்தாப்பூர் முத்துமலை முருகன், ஆத்துார், கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், பெரியமாரியம்மன், குபேர ஆஞ்சநேயர், வீரஆஞ்சநேயர், வெங்கடேச பெருமாள், வீரகனுார் கங்காசவுந்தரேஸ்வரர், கஜவரதராஜ பெருமாள், ஆறகளூர் காமநாதீஸ்வரர், கரிவரதராஜ பெருமாள், அம்பாயிரம்மன், தம்மம்பட்டி காசிவிஸ்வநாதர், உக்ரகதலி நரசிம்ம பெருமாள், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
பக்தர்கள் சிரமம்
வாழப்பாடி அடுத்த பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோவிலுக்கு வெளியிலும் அயோத்தியாப்பட்டணம் - பேளூர் நெடுஞ்சாலை வரை வெயிலில் நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். பந்தல், கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்புகள் உள்ளிட்ட அடிப்படை முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாததால், பக்தர்கள்
சிரமத்துக்கு ஆளாகினர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில், 'புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் முன்னேற்பாடு செய்வதில்லை. பக்தர்கள் கூட்டம் உடனுக்குடன் கலைந்துவிட்டது' என்றார்.
திருக்கல்யாண வைபவம்
தலைவாசல் அருகே வீரகனுார், தென்கரையில் உள்ள கங்காசவுந்தரேஸ்வரர் கோவிலில், திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. உற்சவர் கங்காசவுந்தரேஸ்வரர், தர்மசம்வர்தணி, மணக்கோலத்தில் அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
ரூ.35 லட்சத்தில் அலங்காரம்
இடைப்பாடி அருகே சித்துார் கல்யாண சுப்ரமணியம் சுவாமி கோவிலில், 500, 200, 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளால், மூலவர் கல்யாண சுப்ரமணியம், வள்ளி, தெய்வானை, உற்சவர் கல்யாண சுப்ரமணியம், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வங்கிகள் மூலம் பெறப்பட்ட, 35 லட்சம் ரூபாய் புது நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டு வழிபட்டனர்.