உழவர் சந்தைகளில் ரூ.1.23 கோடிக்கு விற்பனை


சேலம், ஜன. 2--
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, இடைப்பாடி, மேட்டூர் உள்பட, 13 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. அங்கு, ஆங்கில புத்தாண்டான நேற்று காய்கறி விற்பனை களைகட்டியது.
இதனால், 13 உழவர் சந்தைகளில், 282 டன் காய்கறி, பழங்கள், பூக்கள் மூலம், 1.23 ‍கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. தவிர பால் மார்க்கெட், ஆற்றோர காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களிலும், காய்கறி வாங்க மக்கள் கூட்டம் காணப்பட்டது.

Advertisement