40 முதியோருக்கு அறுசுவை உணவு
40 முதியோருக்கு அறுசுவை உணவு
தாரமங்கலம், ஜன. 2-
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, ஓமலுார் அன்னையின் ஊக்குவிப்பு அறக்கட்டளை சார்பில், தாரமங்கலம் வள்ளலார் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு, கடந்த டிச., 17ல் புத்தாடைகள் வழங்கப்பட்டன. அந்த ஆடைகளை தைத்து, நேற்று, 40 முதியோர்களுக்கும் வழங்கப்பட்டன. அவர்கள் புத்தாடை உடுத்திக்கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு, அறக்கட்டளை நிறுவனர் வினோதினி தலைமையில் காலை, மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டன. தமிழ்மொழி மேம்பாட்டு குழு தலைவர் தங்கமணி, செயலர் முத்து, இணை செயலர் முஜிபுர் ரஹ்மான் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement