திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்
கரூர், ஜன. 2-
திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா போட்டிகளில், கரூர் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழாவையொட்டி, கரூர் மாவட்ட பொது நுாலகத்துறை சார்பில், திருக்குறள் தொடர்பாக பேச்சு போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் வினாடி-வினா போட்டி மாவட்ட மைய நுாலகத்தில் நடந்தது. அதில், பேச்சு போட்டியில் பவிஷ்னாஸ்ரீ முதலிடம், தீபிகா இரண்டாமிடம், முகிதா மூன்றாமிடம் பிடித்தனர். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் காளீஸ்வர தமிழரசு முதலிடம், தமிழினியாள் இரண்டாமிடம், ரூபவந்தனா மூன்றாமிடம் பிடித்தனர்.வினாடி-வினா போட்டியில் கவுதமன் முதலிடம், ஆனந்த் இரண்டாமிடம், தேவயாழினி மூன்றாமிடம் பிடித்தனர். இவர்களுக்கு முதல் பரிசாக, 5,000 ரூபாய், இரண்டாம் பரிசாக, 3,000 ரூபாய், மூன்றாவது பரிசாக, 2,000 ரூபாய் மற்றும் பாராட்டு சான்றுகள், கரூர் மாவட்ட கலெக்டரால் வழங்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.