பள்ளப்பட்டியில் முப்பெரும் விழா

பள்ளப்பட்டியில் முப்பெரும் விழா

அரவக்குறிச்சி, ஜன. 2-பள்ளப்பட்டியில், மக்கள் ஆட்டோ ஸ்டாண் டில், 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆட்டோ ஸ்டாண்டின், 12ம் ஆண்டு துவக்க விழா, பெயர் பலகை திறப்பு விழா, உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளப்பட்டி மக்கள் ஆட்டோ ஸ்டாண்ட் நிர்வாகிகள், சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்திய தொழிற்சங்கத்தின் கரூர் மாவட்ட உதவி செயலாளரும், பள்ளப்பட்டி ஆட்டோ சங்க பொறுப்பாளருமான ராஜா முகமது கூறுகையில், ''12 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ ஸ்டாண்ட் துவங்கப்பட்டது. பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக மத்திய, மாநில அரசுகளிடம் பல கோரிக்கைகளை வைத்துள்ளோம்,'' என்றார். ஆட்டோ சங்க மாநில துணைத்தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் கணேஷன், மாவட்ட உதவி செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர் ரங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement