பெ.ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைய துவங்கியது
கரூர், ஜன. 2-
மழை இல்லாததால், கரூர் அருகேயுள்ள, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 488 கன அடியாக குறைந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம், 89.54 அடியாக இருந்தது. அணையில் இருந்து, அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 138 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 400 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
மேலும், மழை இல்லாததால் கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, தண்ணீர் வரத்து குறைந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 800 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 686 கன அடியாக குறைந்தது.
* கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,220 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அதில், 420 கன அடி தண்ணீர் காவிரியாற்றில், டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடி அறுவடை பணிக்காக திறக்கப்பட்டது. மூன்று பாசன வாய்க்காலில், 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 6 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.35 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.