லாரி சக்கரத்தில் சிக்கி தாய் கண்முன் மகன் பலி
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, வெள்ளியூரைச் சேர்ந்தவர் சந்தோஷ், 18. பொன்னேரியில் உள்ள எல்.என்., அரசு கல்லுாரியில், பி.ஏ., வரலாறு முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம், 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில், தாய் கீதாவுடன் ராமன்தண்டலம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். பீமன்தோப்பு பகுதியில் சென்றபோது, முன்னால் எம்.சாண்ட் ஏற்றிச் சென்று கொண்டிருந்த, 'அசோக் லைலண்ட் டாரஸ்' லாரி, திடீரென பின்னோக்கி வந்துள்ளது.
இதில், நிலை தடுமாறி ஸ்கூட்டருடன் சந்தோஷ் மற்றும் அவரது தாயும் கீழே விழுந்தனர். இதில், லாரி சக்கரம் சந்தோஷ் மீது ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே தாயின் கண்முன் சந்தோஷ் உயிரிழந்தார். கீதா சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement