2026 சட்டசபை தேர்தல் வெற்றிக்கு தி.மு.க.,வினர் உழைக்க அழைப்பு தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி
கோடம்பாக்கம், சென்னை, தென்மேற்கு மாவட்டம், தி.நகர் கிழக்கு பகுதி, 132வது வட்ட தி.மு.க.,சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு 'ஏன் வேண்டும்தி.மு.க.,' என்ற தலைப்பில் விளக்க உரை கூட்டம், கோடம்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், கவுன்சிலரும், தி.நகர் மேற்கு பகுதி செயலருமான ஏழுமலை, 132வது வார்டு கவுன்சிலர் கார்த்திகா பாஸ்கர், 132வது வட்டச் செயலர்முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி பேசியதாவது:
மக்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு தொண்டர்களான உங்களுக்கு தான் அதிகம் கிடைக்கும்.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், நம் அரசு செய்துள்ள சாதனைகள், திட்டங்கள்குறித்து, மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.
வரும், 2026 தேர்தலில், 'வெல்வோம் 200; படைப்போம் வரலாறு' என, முதல்வர் ஸ்டாலின் கூறியதை செயல்படுத்த, உங்கள் உழைப்பு முக்கியமானது.
இவ்வாறு அவர் பேசினார்.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வேலு பேசுகையில், ''எதிர்க்கட்சிகள் ஊடகங்கள் வாயிலாகவும், பொய் பிரசாரங்கள் வாயிலாகவும், நம்மை வீழ்த்த நினைக்கின்றனர்.
''ஆனால், நம் இயக்கம், மக்களை நம்பி உள்ளது. முதல்வன் ஸ்டாலின் அறிமுகம் செய்யும் திட்டங்களை, பிற மாநிலங்களில் தங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கும் அளவிற்கு சிறந்தவையாக உள்ளன,'' என்றார்.