ஊராட்சி தலைவருக்கு பாராட்டு விழா

கடலுார் : கடலுார் அடுத்த பாதிரிக்குப்பம் ஊராட்சி தலைவருக்கு, இன்று கூத்தப்பாக்கம் பக்ஷி திருமண மண்டபத்தில் இன்று பாராட்டு விழா நடக்கிறது.

கடலுார் ஒன்றியம், பாதிரிக்குப்பம் ஊராட்சிதலைவராக இருப்பவர் சரவணன். இவரது பதவிக்காலம் ஜன., 5ம்தேதியுடன் முடிவடைவதால், அவருக்கு பாராட்டுவிழா இன்று மாலை 4:00 மணிக்கு கடலுார் கூத்தப்பாக்கம் பக்ஷி திருமண மண்டபத்தில் நடக்கிறது. விழாவில் வர்த்தக சங்க நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், ஓய்வுபெற்ற போலீசார் உட்பட பலர் பங்கேற்று பேசுகின்றனர்.

Advertisement