ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: நடுவீரப்பட்டு அருகே மறியல்

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நடுவீரப்பட்டு அடுத்த கொடுக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மலையடிக்குப்பம் என்ற இடத்தில், அரசுக்கு சொந்த இடத்தில், 30க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்டவர்கள் முந்திரி, வாழை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வருவாய்த்துறை மூலம் கடந்த 31ம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இன்று அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று மதியம் பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் கூடினர்.அப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி 15 நிமிடம் சாலை மறியல் நடந்தது.

வருவாய்த்துறை அதிகாரிகள் பேசியதை தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement