ஆண்டு இறுதியில் ஆறுதல் தந்த வர்த்தக வாகன விற்பனை
சென்னை:டிசம்பர் மாத வர்த்தக வாகன விற்பனை, ஆண்டு இறுதியில் சற்று ஆறுதலை தந்துள்ளது. கடந்த டிசம்பரில், விற்பனை 3.12 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில், 76,395 வர்த்தக வாகனங்கள் விற்பனை ஆன நிலையில், கடந்த டிசம்பரில், 78,940 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டாடா நிறுவனத்தை தவிர பெரும்பாலான முன்னணி நிறுவனங்களின் விற்பனை உயர்ந்துள்ளன.
வோல்வோ ஐச்சர் கூட்டணியில், 7,834 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், ஐச்சர் நிறுவனம், 7,545 வாகனங்களையும், வோல்வோ நிறுவனம், 289 வாகனங்களையும் உள்நாட்டில் விற்பனை செய்துள்ளன. அதிகபட்சமாக, மாருதி நிறுவனம், 40 சதவீத விற்பனை வளர்ச்சியை அடைந்துள்ளது.
டாடா 32,668 32,369 0.92 (குறைவு)
லேலாண்டு 15,153 15,713 3.69
மஹிந்திரா 17,888 19,502 9.02
வால்வோ ஐச்சர் 7,705 7,834 1.67
மாருதி சுசூகி 1,714 2,406 40.37
இசுசூ 946 626 33.83(குறைவு)
மொத்தம் 76,073 78,450 3.33