தெரு நாய்கள் கடித்து 10க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை
குளித்தலை,: குளித்தலை அருகே, தெரு நாய்கள் கடித்ததில், 10க்கும் மேற்-பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்., மருதுார் மற்றும் நங்-கவரம் டவுன் பஞ்., பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் ஆடு, கோழி, வாத்துகளை கடித்து வந்தது. தற்போது சாலையில் நடந்து செல்வோரையும், இரு சக்கர வாகனங்களில் செல்வோ-ரையும் துரத்தி துரத்தி கடித்து வருகிறது. சமீபத்தில் கூடலுார் பஞ்.,ல், ஆறு பேரை கடித்ததால், அவர்கள் தோகைமலை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சையில் உள்ளனர்.இதேபோல், நங்கவரம் பகுதியில் சுப்பிரமணி, பார்வதி, வெங்-கடேசன், அண்ணாச்சி மற்றும் கீரை வியாபாரி ஆகியோரையும் தெரு நாய்கள் கடித்துள்ளன. மருதுாரில் விவசாயி போத்தராஜ் என்பவருடைய பசு கன்று, மஞ்சுளா என்பவருடைய ஆட்டை வெறி நாய்கள் கடித்து கொன்றுள்ளன.
எனவே, சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து, கருத்-தடை சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும்.