துணை முதல்வர் பிறந்த நாள் விழா கரூரில் விளையாட்டு போட்டி

கரூர்: துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, தி.மு.க., சார்பில் விளையாட்டு போட்டி நடந்தது.


கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், திருவள்ளுவர் மைதானத்தில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார். கபடி, கோகோ, வாலிபால், எறிபந்து, கூடைப்பந்து, தடகள போட்டிகள் நடக்கிறது. தடகள போட்-டிக்கு ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லுாரியில் இருந்து, ஒரு போட்டிக்கு இருவர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். குழு போட்டியில் சிறந்த ஐந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ஐந்து வீராங்கனைகளுக்கும், அதிக புள்ளிகள் பெற்ற ரெண்டு பள்ளி மற்றும் இரண்டு கல்லுாரிக்கும் என, 14 பரிசு கோப்பைகள் சிறப்பு பரிசாக வழங்கப்படும். தடகள போட்டியில் அதிக புள்-ளிகள் பெறும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு தலா ஒரு கோப்பை வீதம், 2 கோப்பைகள் வழங்கப்படும்.நிகழ்ச்சியில், துணை மேயர் சரவணன், மண்டல தலைவர்கள் கனகராஜ், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement