பா.ஜ., அண்ணாமலையின் அக்கா கணவர் சொந்தம் இல்லையா; எம்.பி.,ஜோதிமணி கேள்வி
கரூர்: ''ஜோதிமணி, செந்தில் பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர், எனக்கு சொந்தம் என கூறும் அண்ணாமலைக்கு, அவரது அக்கா கணவர் சொந்தம் இல்லையா,'' என, கரூர் காங்., எம்.பி., ஜோதிமணி கேள்வி எழுப்பினார்.
கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, கரூர் ஆகிய தொகுதிகளில் ஓட்டளித்த வாக்காளர்களுக்கு, காங்., எம்.பி.,ஜோதிமணி நன்றி தெரிவித்து வருகிறார். கரூர் மாநக-ராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டியில் எம்.பி., ஜோதிமணி, வாக்-காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நேற்று தொடங்-கினார்.அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், அக்கா கணவ-ருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்-திய சோதனையில், 13 கோடி ரூபாயை கைப்பற்றி, 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது குறித்து அண்ணாமலை-யிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினால், 'கரூரை சேர்ந்த ஜோதி-மணி, செந்தில் பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் எனக்கு சொந்தம்' என்கிறார். அண்ணாமலைக்கு அவரது அக்கா கணவர் சிவகுமார் சொந்தம் இல்லையா? மேலும், அமலாக்கத்-துறை வழி தவறி அங்கே போயிருக்கலாம். அந்த வழக்கு எப்படி நடக்கிறது என்பதை பொறுத்துதான், அது குறித்து பேச முடியும். பிரதமர் மோடி அரசுக்கு எதிராக பேசும் மாநிலங்களில், அமலாக்-கத்துறை நிரந்தரமாக தங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.