பழுதான குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா


காரிமங்கலம், ஜன. 3-
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அ.சப்பாணிப்பட்டியில், 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இதிலிருந்து வரும் குடிநீரை இப்பகுதி மக்கள் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இத்தொட்டியின் குழாயில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக, நாள்தோறும் ஏராளமான லிட்டர் தண்ணீர் வீணாகிறது. அதை சரி செய்ய , அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. நாள்தோறும் குடிநீர் வீணாகி கழிவுநீர் கால்வாய்க்கு செல்கிறது. எனவே, பழுதான நிலையில் உள்ள இந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement