பி.பி.டி., ரக நெல்லுக்கு உரிய விலை: அரசுக்கு கோரிக்கை

கடலுார் : பி.பி.டி., ரக நெல்லுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை:

மிகவும் சன்னகர நெல்லான பி.பி.டி., டெல்டா மாவட்டங்களில் பெருமளவு விவசாயிகள் விளைவித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு பி.பி.டி.,ரக நெல், மூட்டை ஒன்றுக்கு 1,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டு சம்பா அறுவடை துவங்கி உள்ள நிலையில், அதே ரக நெல் மூட்டை 1,300 ரூபாயாக குறைத்து வாங்கப்படுகிறது.

வியாபாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிண்டிகேட் அமைத்துக்கொண்டு, விவசாயிகள் நெல்லை குறைந்த விலைக்கு வாங்க முயற்சிக்கின்றனர். இதனால், மழை, வெள்ள பாதிப்பு உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளை கடந்த விவசாயிகள் பயிர் செய்துள்ள நிலையில், தற்போது விலை குறைவால் பெருத்த நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, அரசு உடனடியாக தலையிட்டு, சன்ன ரக நெல்லிற்கு அரசு நிர்ணயிக்கும் விலையை விட குறைவாக வாங்கினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement