ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சீனியர் எஸ்.பி.,யிடம் முறையீடு

புதுச்சேரி : புதுச்சேரி நகர வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு காய்கறி கடைகளை அகற்ற வியாபாரிகள் போக்குவரத்து சீனியர் எஸ்.பி.,யிடம் வலியுறுத்தினர்.

புதுச்சேரியில் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைகளில் போலீசார் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகின்றனர். அதன்படி, போக்குவரத்து கிழக்கு எஸ்.பி., அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி தலைமை தாங்கினார்.

எஸ்.பி., செல்வம், இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்இன்ஸ்பெக்டர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நேரு வீதி, மிஷன் வீதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகளில் நடைபாதை வியாபாரிகள், வணிகர்கள் கலந்து கொண்டு பல்வேறு குறைகளை தெரிவித்தனர்.

அப்போது, பாரதி வீதி, ரங்கப்பிள்ளை வீதி, காந்தி வீதி, சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியை ஆக்கிரமித்து காய்கறி கடைகள் அதிக அளவில் வைத்துள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. , மார்க்கெட்டிற்குள் சென்று பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் மார்க்கெட்டில் வாடகை கட்டி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். ஆக்கிரமிப்பு காய்கறி கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

Advertisement