ஊராட்சி அலுவலக கட்டடம் அங்கன்வாடி மையங்கள் திறப்பு
ஓமலுார்: காடையாம்பட்டி ஒன்றியம், நடுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்-கப்பள்ளி வளாகத்தில், 14 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
அந்த கட்டடத்தை, சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். முன்னதாக அங்-கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.அதேபோல் உம்பிளிக்கம்பட்டி ஊராட்சியில், 22.65 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகம், 14 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை, அமைச்சர் திறந்து வைத்தார். சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, காடையாம்பட்டி தி.மு.க., ஒன்றிய செயலர் அறிவழகன், நகர செயலர் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement