பெண்ணை கடத்தி பாலியல் சித்ரவதை செய்து கொன்றவருக்கு இரட்டை ஆயுள்

4

திருநெல்வேலி: திருநெல்வேலி, வண்ணார்பேட்டையை சேர்ந்த திருமணமான 27 வயது பெண் தனியார் மொபைல் கடையில் பணியாற்றி வந்தார்.


அவர் வாடகைக்கு இருந்த வீட்டின் உரிமையாளர் பேபி லட்சுமி என்பவரின் சகோதரர் ஞானதுரை, 30. சீவலப்பேரியை சேர்ந்தவர். திருமணமாகி விவாகரத்து பெற்றவர். சகோதரி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். வாடகை வீட்டில் வசித்த பெண்ணுக்கு போன் செய்தும், நேரில் பேசியும் தொந்தரவு கொடுத்தார்.


2016 நவ., 17ல் அப்பெண்ணை கடத்திச் சென்று களக்காடு அருகே பாலியல் சித்ரவதை செய்ததோடு நைலான் கயிற்றால் கழுத்தை நெருக்கி ஆசிட் வீசினார். பலத்த காயமடைந்த அப்பெண் ஆறு மாதங்கள் சிகிச்சையில் இருந்து இறந்தார். களக்காடு போலீசார் ஞானதுரையை கைது செய்தனர்.


வழக்கு திருநெல்வேலி மகிளா கோர்ட்டில் நடந்தது. விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் ஞானதுரைக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஏழாண்டு சிறைத் தண்டனையும் 3,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement