சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன கொடியேற்றம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

நடராஜர் சன்னதிக்கு முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில், வேத மந்திரங்கள் முழங்க, உற்சவ ஆச்சாரியார் சிவராஜ தீட்சிதர் காலை 6:50 மணிக்கு கொடியேற்றி உற்சவத்தை துவக்கி வைத்தார்.

இன்று (5ம் தேதி) வெள்ளி சந்திரபிரபை வாகனத்தில் சாமி வீதியுலா நடக்கிறது. 6ம் தேதி தங்க சூரியபிரபை, 7ம் தேதி வெள்ளி பூத வாகனம், 8ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான், 9ம் தேதி வெள்ளி யானை வாகனம், 10ம் தேதி தங்க கைலாச வாகனம், 11ம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர், வெட்டுக்குதிரையில் வீதி உலா நடக்கிறது. தேரோட்டம் 12ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் தேரில் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து நான்கு வீதிகள் வழியாக இழுத்து செல்வர்.

Advertisement