யானை தந்தங்கள் பறிமுதல் 5 பேரிடம் விசாரணை
மேட்டூர்: யானை தந்தங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், 5 பேரிடம் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம் கொள த்துார், குரும்பனுார் அடுத்த ஏழரைமத்-திக்காடு கிராமம், மலை அடிவாரத்தில் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த சிலர், யானை தந்தங்களை பதுக்கி வைத்து கடத்துவதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் உள்ளிட்ட ஊழியர்கள், யானை தந்தங்-களை கூடுதல் விலைக்கு வாங்குவதாக கூறி, அதற்கான புரோக்-கர்களை அணுகினர். அவர்களும், வனத்துறையினர் என தெரி-யாமல், நேற்று ஏழரைமத்திக்காடுக்கு அழைத்து சென்றனர்.அங்கு ஒரு வீட்டில் இருந்து, யானைகளின், 4 தந்தங்களை, மாலை, 4:00 மணிக்கு சாக்கில் கட்டி காரில் ஏற்றினர். அப்போது வனத்து-றையினர், தந்தங்களை பறிமுதல் செய்து, அதை பதுக்கியவர்கள், புரோக்கர்கள் என, 5 பேரை பிடித்து மேட்டூர் வன அலுவலகத்-துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். இதுகுறித்து வனத்துறை-யினர் கூறியதாவது: கோவிந்தபாடி பழனி, 48, தலைவாசல் செல்-வகுமார், 40, குரும்பனுார் பெருமாள், 50, ஏழரைமத்திக்காடு ஒண்டியப்பன், 59, வாழப்பாடி அருணாசலம், 46, ஆகியோ-ருக்கும், யானை தந்தங்கள் கடத்தலுக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. கடத்தல் கும்பல் பயன்படுத்திய, 'வெர்னா' கார், ஸ்டார் சிட்டி பைக், டியோ மொபட்டை பறிமுதல் செய்-துள்ளோம். பறிமுதல் செய்யப்பட்ட, 4 தந்தங்கள், 20 ஆண்டுக-ளுக்கு முன்னதாக இருக்கக்கூடும். இரு தந்தங்கள், 5 கிலோ, மற்ற இரு தந்தங்கள், 1.5 கிலோ உள்ளது. தொடர்ந்து விசாரிக்-கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.