தனியார் பஸ்கள் மீண்டும் சிறைபிடிப்பு

தலைவாசல்: தலைவாசல் அருகே மணிவிழுந்தான் பஸ் ஸ்டாப்பில் அனைத்து அரசு, தனியார், டவுன், மப்சல் நின்று செல்ல, போக்குவரத்து துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் நேற்று முன்தினம், பஸ் ஸ்டாப்புக்கு வராமல் சென்ற இரு தனியார் பஸ்களை, மக்கள் சிறைபிடித்து, வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில் நேற்று மதியம், 3:30 மணி, இரவு, 8:30 மணிக்கு, ஆத்துார் மற்றும் கள்ளக்குறிச்சி வழியே வந்த தனியார் பஸ்கள், மேம்-பாலம் வழியே செல்ல முயன்றதால், அந்த பஸ்களை, மக்கள் சிறைபிடித்து வாக்குவாதம் செய்தனர். தலைவாசல் போலீசார் வந்து, பேச்சு நடத்தினர். போலீசார், 'தனியார் பஸ் உரிமை-யாளர், டிரைவர்களை வரவழைத்து, பஸ் ஸ்டாப் வழியே செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்தனர். இதனால் மக்கள், பஸ்களை விடுவித்தனர்.

Advertisement