'மாமூல்' கேட்டு மிரட்டல் கம்யூ., நிர்வாகி கைது
காடையாம்பட்டி: காடையாம்பட்டி தாலுகா நடுப்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ், 43. அப்பகுதியில் பேக்கரி நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, அங்கு வந்த இருவர் தகராறில் ஈடுபட்டு, 'நாங்கள் ரவுடிகள். மாதந்தோறும், 2,000 ரூபாய் மாமுல் தர வேண்டும்' என கூறி கத்தியை காட்டி மிரட்டி, கல்லாவில் இருந்த, 250 ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றனர்.
இதுகுறித்து ராஜேஷ் நேற்று அளித்த புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார், பேக்கரியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி-களை வைத்து விசாரித்ததில், காடையாம்பட்டி, நடு வீதியை சேர்ந்த, இ.கம்யூ., கட்சியின் காடையாம்பட்டி ஒன்றிய துணை செயலர் வெங்கடாசலம், 42, தீவட்டிப்பட்டி, ஆதிதிராவிடர் கால-னியை சேர்ந்த வீராசாமி, 42, என தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement