சுகாதார நிலைய காலி பணியிடம் நிரப்ப நடவடிக்கை

சேலம், ஜன. 4-
சேலம் மாநகராட்சியில், 16 நகர்புற சுகாதார நிலையங்கள் உள்ளன. அங்கு பணிபுரிய, 52 செவிலியர், 16 மருந்தாளுனர், 17 லேப் டெக்னீஷியன் பணியிடங்களுக்கு, தேசிய நகர்புற சுகாதார இயக்கத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஓய்வு, இடமாறுதலால், தற்போது, 33 செவிலியர், 7 மருந்தாளுனர், 4 லேப் டெக்னீஷியன் என, 44 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணியிடங்களை நிரப்பும் வரை, மருத்துவ சேவையை தங்கு தடையின்றி வழங்க, தொகுப்பூதிய அடிப்படையில் ஜன., 1 முதல் மார்ச், 31 வரை பணிபுரிய, தகுதியான ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. செவிலியர், மருந்தாளுனர் பணிக்கு, மாத ஊக்கத்தொகை, 14,000, லேப் டெக்னீஷியன் பணிக்கு, 12,000 ரூபாய், மாநகராட்சி பொது நிதியில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement