குழந்தைகளுக்கான விளையாட்டு 30 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

உடுமலை; உடுமலை கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில், குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.

போட்டிகளை பள்ளி முதல்வர் கவிதா துவக்கி வைத்தார். பள்ளி செயலாளர்கள் உமாசந்தர், பானுமதி முன்னிலை வகித்தனர்.

போட்டிகள், குழந்தைகளின் வயது அடிப்படையில் 6 வயதுக்குட்பட்டோர், 8 வயதுக்குட்பட்டோர், 10 மற்றும் 12 வயதுக்குட்பட்டோர் என நான்கு பிரிவுகளில் நடந்தது.

பல்வேறு பகுதிகளிலிருந்தும் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்தும், விளையாட்டு அமைப்புகளிலிருந்தும் குழந்தைகள் பங்கேற்றனர். ஓட்டப்பந்தயம், டென்னிஸ் பந்து எறிதல், நீளம் தாண்டுதல், மட்டைபந்து எறிதல் உள்ளிட்ட பல விளையாட்டுப்போட்டிகள் நடந்தன.

Advertisement