'ஹவுஸ் ஓனர்' வீட்டில் நகை திருடிய பெண் கைது

புழல்:புழல், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் அமுதா, 38; வீட்டின் கீழே மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 19ம் தேதி மாலை, தன் குழந்தையை அழைத்து வர பள்ளிக்கு சென்றார்.

பின், வீடு திரும்பிய போது, பீரோவில் இருந்த நகை திருடு போனது தெரிந்தது. இது குறித்து புழல் போலீசார் விசாரித்தனர்.

இதில், வீட்டில் குடியிருக்கும், கும்மிடிப்பூண்டி, பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்த ரேகா, 31, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அமுதா வீட்டில் சிறிது சிறிதாக, 25 சவரன் நகைகளை ரேகா திருடியது தெரிந்தது. தொடர் விசாரணையில் ரேகா மீது பாதிரிவேடு காவல் நிலையத்தில், கொலை வழக்கு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ரேகாவை கைது செய்த புழல் போலீசார், அவரிடமிருந்து 6 சவரன் நகையை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

Advertisement