பொங்கல் பரிசு 'டோக்கன்' வீடுதோறும் வினியோகம்


சேலம், ஜன. 4-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில், 1,715 ரேஷன் கடைகள் மூலம், 10.78 லட்சம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கப்படும்.
இதனால் விற்னையாளர்கள், வீடுதோறும் சென்று, எந்த தேதி, எத்தனை மணிக்கு ரேஷன் கடைக்கு வந்து பொருட்களை பெற்றுகொள்ள வேண்டும் என குறிப்பிட்டு, 'டோக்கன்' வழங்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நேற்று காலை முதல், விற்பனையாளர்கள் வீடுதோறும் சென்று, டோக்கனை வழங்கி வருகின்றனர். வரும், 8 வரை டோக்கன் வினியோகிக்ப்பட்டு தினமும், 200 பேர் பொருட்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு, வரும், 9ல் இருந்து வழங்கப்படும் என, கூட்டுறவு அதிகாரிகள்
தெரிவித்தனர்.

Advertisement