மேட்டூர் நீர்மட்டம் 119.76 அடியாக சரிவு


மேட்டூர் நீர்மட்டம்
119.76 அடியாக சரிவு
மேட்டூர், ஜன. 4-
இரு நாட்கள் முழு கொள்ளளவில் நீடித்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று, 119.76 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த மழையால் கடந்த ஆண்டில், டிச., 31ல், அணை நீர்மட்டம், 3ம் முறையாக முழு
கொள்ளளவை எட்டியது.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளில் பாசனத்துக்கு நீர் தேவைபட்டதால் வினாடிக்கு, 10,000 கனஅடியாக இருந்த நீர்திறப்பு நேற்று காலை, 8:00 மணிக்கு, வினாடிக்கு, 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அந்த நீர், அணை சுரங்க மின் நிலையங்கள் வழியே காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 1,871 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று, 1,992 கன அடியாக அதிகரித்தது.
வரத்தை விட திறப்பு கூடுதலாக இருந்ததால், முழு கொள்ளளவில் நீடித்த மேட்டூர் அணை நீர்மட்டம் இரு நாட்களுக்கு பின் நேற்று, 119.76 அடியாக சரிந்தது.

Advertisement