கருப்புத் துணி கட்டி போராட்டம்
மேலுார், ;அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஐந்தாயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் எடுத்துள்ளது.
இந்த ஏலத்தை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி நேற்று தும்பைபட்டியில் கடையடைப்பு நடத்தி 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கக்கன் மணிமண்டபம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கண்களில் கருப்புத் துணி கட்டியும், பெண்கள் கும்மிகொட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுரங்க உரிமத்தை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் விவசாய சங்க தாலுகா செயலாளர் ராஜேஸ்வரன், தும்பைப்பட்டி ஊராட்சி தலைவர் அயூப் கான், கம்பூர் செல்வராஜ், கரும்பு விவசாய சங்க துணை தலைவர் பழனிச்சாமி உள்பட திரளானோர் பங்கேற்றனர். இதுபோன்று மேலவளவிலும் உள்ளிட்ட பல கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஒப்பாரி வைத்து டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.