ஏற்காட்டில் கட்டட அனுமதி ஒற்றை சாளர முறையில் பெறலாம்


சேலம், ஜன. 4-
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
ஏற்காடு மலைப்பகுதியில் கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட மக்கள், குடியிருப்பு கட்ட, 250 சதுர மீட்டர், அதாவது, 2,691 சதுரடிக்கு மிகாமல் தரைத்தளம், தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் மட்டும், 7 மீட்டர் உயரத்துக்கு உட்பட்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு, வனம், கனிம வளம், சுரங்கம், வருவாய், வேளாண் துறைகளின் தடையில்லா சான்றுடன் விண்ணப்பித்து, இணையதளம் மூலம் ஒற்றை சாளர முறையில் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
ஏனைய, 250 சதுர மீட்டருக்கு மேல் குடியிருப்பு, பிற வணிக கட்டுமானங்களுக்கும், மேற்கண்ட துறைகளின் தடையின்மை சான்று பெறப்பட்டு, எச்.ஏ.சி.ஏ., கமிட்டி, ஏ.ஏ.ஏ., கமிட்டி ஆகியற்வற்றின் முன் அனுமதியுடன் கட்டட அனுமதி, மனைப்பிரிவு அனுமதியும், ஒற்றை சாளர முறையில் இணையதளம் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.
அனுமதியின்றி கட்டடம், மனைப்பிரிவு அபிவிருத்திகள் மேற்கொள்ளக்கூடாது. நில அமைப்புகளில் மாறுபாடு செய்தல், காடுகளை அழித்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இணையதளம் மூலம் வழங்கப்படும் வரைபட அனுமதிக்கு மாறாகவோ, கூடுதலான கட்டுமானங்கள் அமைப்பது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement