சூரிய சக்தி பயிலரங்கம்

சிவகாசி: சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரியில் தமிழகஅரசின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத்துறை, மாவட்ட பருவநிலை மாற்ற இயக்கம் சார்பில் பருவநிலை மாற்றத்தை சமாளிக்க சூரிய சக்தி என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது.

கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனர் (ஓய்வு) சிவலிங்க ராஜன், தமிழ்நாடு பசுமை எரிசக்தி நிறுவனம் என்.சி.இ.எஸ். சொற்பொழிவாளர் ராஜசேகர், கல்லுாரி முதல்வர் அறிவழகன், கல்லூரி மூத்த இணை பேராசிரியர் ஆல்வின் கிளாரன்ஸ் ஆசிஸ் பேசினர்.

கல்லுாரியில் அமைந்துஉள்ள மிகப்பெரிய சூரிய சக்தி மின் உற்பத்தி செயல்முறைகள் பற்றி விளக்கப்பட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொழில்துறை வல்லுநர்கள், மின் பொறியாளர்கள், கட்டுமான பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement