ஆத்துக்காடு பிரிவில் பள்ளம் எச்சரிக்கை பலகை அவசியம்

வீரபாண்டி: சேலம், சூளைமேடு பஸ் ஸ்டாப் அருகே உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செல்லும் சாலை, பூலாவரி, ஆத்-துக்காடு செல்லும் சாலைகள் எதிரெதிரே உள்ளன. இதன் நடுவே உள்ள, சேலம் - கோவை நான்கு வழிச்சாலையை கடந்து செல்-வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டதால், 6 மாதங்களுக்கு முன், 4 வழிச்சாலையை கடக்க முடியாதபடி, போலீசார் தடுப்-புகள் வைத்தனர். குறுக்கு சாலை பிரிவு உள்ளதாக எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.


தொடர்ந்து உத்தமசோழபுரம் மேம்பாலம் முதல் அரியானுார் சந்திப்பு வரை, விடுபட்ட பகுதிகளில் புதிதாக சர்வீஸ் சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் ஆத்துக்காடு பிரிவில், 4 வழிச்-சாலை இணைப்பை துண்டித்து, 4 அடி ஆழ பள்ளத்தில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை துண்டிப்பு, பள்ளம் குறித்து, எச்சரிக்கை ஏதும் இல்லாததால், ஆத்துக்காடு செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகளை எச்சரிக்க, அறிவிப்பு பலகை வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement