மாரத்தான் போட்டியில் 200 வீரர்கள் பங்கேற்பு
சேலம்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மாரத்தான் போட்டி, சேலம் காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். சேலம் எம்.பி., செல்வகணபதி தொடங்கி வைத்தார்.
அதில், 17 - 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு, 8 கி.மீ., பெண்களுக்கு,- 5 கி.மீ., 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, 10 கி.மீ., பெண்களுக்கு, 5 கி.மீ., என, போட்டிகள் நடத்தப்பட்-டன. 200க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்தோருக்கு, 5,000,- இரண்டாம் இடம் பிடித்தோருக்கு, 3,000,- மூன்றாம் இடம் பிடித்தோருக்கு, 2,000, நான்கு முதல் பத்து இடங்களை பிடித்தவர்களுக்கு, தலா, 1,000- ரூபாய், அவரவர் வங்கி கணக்கு-களில் வரவு வைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. தமிழக மேக்னசைட் லிமிடெட் நிறுவன பொது மேலாளர் கீதா பிரியா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்ளிட்டோர் பங்-கேற்றனர்.தி.மலை, திருப்பத்துார்
வாலிபர்கள் அசத்தல்
கொங்கணாபுரம் முத்து மாரத்தான் குழு சார்பில், மாநில மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. 1,200 பேர் பங்கேற்றனர். 42 கி.மீ., ஆண்கள் பிரிவில், 2 மணி, 35 நிமிடம், 36 நொடியில் ஓடிய, திருவண்ணாமலையை சேர்ந்த சக்திவேல், திருப்பத்துாரை சேர்ந்த சந்தோஷ்குமார் முறையே, முதல், இரண்டாம் இடங்-களை பிடித்தனர். 2 மணி, 44 நிமிடம், 42 நொடியில் ஓடிய, கரூரை சேர்ந்த ரங்கராஜ், மூன்றாம் இடம் பிடித்தார். பெண்கள் பிரிவில் நாகலுார் ரீனா, கோமளாதேவி, பொள்ளாச்சி திவ்யா முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றியாளர்க-ளுக்கு முறையே, 50,000, 30,000, 15,000 ரூபாய் வீதம் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
அதேபோல், 21 கி.மீ., கொண்ட ஆண்கள் அரை மாரத்தானில் ஜெகன், மாதவன், நிகில்குமார், பெண்கள் பிரிவில் லதா, சவும்யா, மீனாட்சி, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். தவிர, 11, 6, 3 கி.மீ., போட்டிகள், பெரியவர்களுக்கு, 8 கி.மீ., நடைப-யண போட்டி நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா, கொங்கணாபுரம் நாச்சியப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. அறக்கட்-டளை தலைவர் ஆயிகவுண்டர் தலைமை வகித்தார். அதில், சங்க-கிரி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனி, ஸ்லெக்ட் நிறுவன மேலாளர் நமச்சிவாயம், ஏ.ஜி.என்., பள்ளி இயக்குனர் சுப்ரமணியம் பரிசுகளை வழங்கினர். செயலர் மணிசங்கர் உள்-பட பலர் பங்கேற்றனர்.