கேழ்வரகு கொள்முதல் பதிவு செய்து விற்கலாம்

சேலம்: கேழ்வரகு நேரடி கொள்முதல் நிலையங்களில், விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், இணைய தளத்தில் பதிவு செய்-யலாம்.


இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:கேழ்வரகு பயிரிடும் விவசாயிகள் பயன்பெற, தமிழக நுகர்-பொருள் வாணிப கழகத்தால், அந்தந்த மாவட்டங்களில், மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட கேழ்வரகு கொள்முதல் திட்டத்தில், நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அங்கு எளிதில் பதிவு செய்து, விற்பனை செய்ய, இ - டிபிசி, இணையதளத்தில் பெயர், ஆதார் எண், புல எண், வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை பதிவேற்றம் செய்து, கொள்முதல் தேதியை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்த மொபைல் எண்ணில், விற்பனை செய்யப்படும் நாள், நேரம் உள்ளிட்டவை, குறுந்தகவலாக அனுப்பப்படும். 2024 - 25 பருவத்துக்கு கேழ்வரகு குவிண்டால் ஒன்றுக்கு, 4,290 ரூபாய் ஆதார விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விப-ரங்களுக்கு சீலநாயக்கன்பட்டி, திருச்சி பிரதான சாலையில் உள்ள, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரை நேரிலோ, 94431 18108, 96770 54961 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்-ளலாம்.

Advertisement