குழந்தை இயேசு பேராலயத்தில் 34ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்
சேலம்,: சேலம், 4 ரோட்டில் உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில், 34ம் ஆண்டு பேராலய பெருவிழா கொடியேற்றம் நேற்று நடந்-தது. இதற்கு, ஆலயத்தின் உள்ளே -கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் கொடியேற்றினார். தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்-றது. ஆலய பங்கு தந்தை ஜோசப் லாசர் உள்ளிட்ட பலர் பங்கேற்-றனர். இன்று முதல் வரும், 14 வரை மாலை, 6:00 மணிக்கு நவநாள் திருப்பலி நடக்கிறது. 15 காலை, 7:00 மணிக்கு பெரு-விழா திருப்பலி, மாலை, 6:00 மணிக்கு திருப்பலி, இரவு, 7:30 மணிக்கு தேர் மந்திரிப்பு, 8:00 மணிக்கு தேர்பவனி, 9:00 மணிக்கு நற்கருணை ஆசீர், 9:30 மணிக்கு பெருவிழா கொடி இறக்கம் நடக்க உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement