ரோட்டில் வளர்ந்து நிற்கும் சீமைக் கருவேல மரங்கள்

காரியாபட்டி: எஸ்.கடமங்குளம் சத்திரபுளியங்குளம் ரோட்டில் சீமைக் கருவேல மரங்கள் புதர் மண்டி கிடப்பதால் பஸ்சில் பயணம் செய்பவர்களை பதம் பார்த்ததில் பலர் காயமடைந்தனர்.

காரியாபட்டி சுற்று கிராமங்களில் ரோட்டை ஒட்டி சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து, கிளைகள் ரோட்டில் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அதிவேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.

எஸ்.கடமங்குளத்தில் இருந்து சத்திரபுளியங்குளம் செல்லும் 2 கி.மீ. தூரம் உள்ள ரோட்டில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதில் பயணிப்பவர்களை மரக் கிளைகள் பதம் பார்த்ததில், பலர் காயமடைந்தனர். பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே இப்பகுதியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement